--- --:--:-- --

சவரன் ரூ.1,05,560-க்கு விற்பனை!

7

கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வரும் நிலையில், சென்னை சந்தையில் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்வைக் கண்டு வருகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.480 உயர்ந்து ரூ.1,05,560-க்கு விற்பனையாகிறது. கிராமுக்கு ரூ.60 உயர்ந்து ரூ.13,195 ஆக விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையைப் பொறுத்தவரை, தொடர்ச்சியாக 4-வது நாளாக இன்று எந்த மாற்றமும் இன்றி விற்பனையாகி வருகிறது. ஒரு கிராம் வெள்ளி ரூ.220-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,20,000 (ரூ.2.20 லட்சம்)-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

 

 

 

அக்டோபர் 23: சவரனுக்கு ரூ.1,400 குறைந்து ரூ.1,04,480-க்கும், கிராமுக்கு ரூ.175 குறைந்து ரூ.13,060-க்கும் விற்பனையானது.

 

அக்டோபர் 24: தங்கத்தின் விலை சரிவிலிருந்து மீண்டு சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.1,04,560-க்கும், கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.13,070-க்கும் விற்பனையானது.

 

அக்டோபர் 25: ஒரு சவரன் தங்கம் ரூ.1,04,560-க்கும், ஒரு கிராம் ரூ.13,070-க்கும் வர்த்தகமானது.

 

அக்டோபர் 26: சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.1,04,680-க்கும், கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ரூ.13,085-க்கும் விற்பனையானது.

 

அக்டோபர் 27: நேற்று சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.1,05,080-க்கும், கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ரூ.13,135-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

வெள்ளியின் விலையில் 4-வது நாளாக இன்றும் எந்த மாற்றமும் இல்லை. அதன்படி, ஒரு கிராம் வெள்ளி ரூ.220-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,20,000-க்கும் (ரூ.2.20 லட்சம்) விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon