--- --:--:-- --

நவம்பர் 12-ல் வெளியாகும் வரைவு வாக்காளர் பட்டியல்!

1

தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்வதற்கான பணிகள் தொடர்பாக, இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள கால அட்டவணையின்படி ராமநாதபுரம் மாவட்டத்திலும் சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, நவம்பர் 2-ம் தேதி முதல் வாக்காளர் பட்டியல் தொடர்பான பணிகள் தொடங்குகி வரைவு வாக்காளர் பட்டியல் நவம்பர் 12-ம் தேதி அன்று வெளியிடப்பட உள்ளது.

 

 

வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட பின்னர், பெயர் சேர்த்தல், நீக்குதல் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்வதற்கான விண்ணப்பங்களை நவம்பர் 12-ம் தேதி முதல் டிசம்பர் 11-ம் தேதி வரை அளிக்கலாம். பெறப்படும் விண்ணப்பங்கள் மீதான தீர்வு நடவடிக்கைகள் டிசம்பர் 28-ம் தேதிக்குள் மேற்கொள்ளப்பட்டு, இறுதி வாக்காளர் பட்டியல் அடுத்தாண்டு ஜனவரி 4ம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் மற்றும் திருத்தப் பணிகளை மேற்கொள்ளும் வகையில், வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலம் வீடு வீடாகச் சென்று தகவல்கள் சேகரிக்கும் பணிகள் நடைபெற உள்ளன.

 

 

மேலும், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கவும், நீக்கவும், முகவரி மாற்றம் மற்றும் பிற திருத்தங்களை மேற்கொள்ளவும் விரும்புவோர் 6,7 மற்றும் 8 ஆகிய படிவங்களைப் பூர்த்தி செய்து சிறப்பு முகாம்கள் நடைபெறும் நாட்களில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களை அணுகி விண்ணப்பங்களை அளிக்கலாம் மற்றும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான விண்ணப்பங்களை https:// voters.eci.gov.in என்ற இணையதளம் மற்றும் வாக்காளர் உதவி செயலி வாயிலாகவும் சமர்ப்பிக்கலாம்.

 

 

மேலும், அடுத்த ஆண்டு ஜனவரி 1, ஏப்ரல் 1, ஜூலை 1 மற்றும் அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் 18 வயதைப் பூர்த்தி செய்யும் தகுதியுடையவர்களும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம். ஆகையால் தகுதியுடையவர்கள் தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளதா என்பதைச் சரிபார்த்து, பெயர் சேர்த்தல் மற்றும் தேவையான திருத்தங்களை உரிய காலத்திற்குள் மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர் சிவகுரு பிரபாகரன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon