--- --:--:-- --

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு மழை!

3

மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தென் தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

நாளை மற்றும் நாளை மறுநாள் மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென் தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 31ஆம் தேதி தமிழ்நாட்டின் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

31ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், அதிகபட்ச வெப்பநிலை 97 டிகிரி ஃபாரன்ஹீட் வரை பதிவாகக்கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon