--- --:--:-- --

13 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்டோ கட்டணம் மாற்றியமைப்பு!

2

ஆட்டோக்களில் பயணிப்பதற்கு குறைந்தபட்ச கட்டணமாக 50 ரூபாயை தமிழ்நாடு அரசு நிர்ணயித்துள்ளது. தமிழ்நாட்டில் ஆட்டோக்களுக்கான கட்டணத்தை அரசு கடந்த 2013-ஆம் ஆண்டில் நிர்ணயித்த நிலையில், 13 ஆண்டுகளுக்குப் பிறகு கட்டணத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்று ஆட்டோ ஓட்டுநர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

 

இதனைத் தொடர்ந்து, கட்டணத்தை மாற்றி அமைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதன்படி, சென்னை மாநகரப் பகுதி உள்ளிட்ட மாநிலம் முழுவதும் இயங்கும் ஒப்பந்த அடிப்படையிலான ஆட்டோக்களுக்கு குறைந்தபட்ச கட்டணம் 50 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதலில் பயணிக்கும் 1 கிலோ மீட்டர் மற்றும் 800 மீட்டருக்கு 50 ரூபாயும், அதையடுத்து ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் கூடுதலாக 25 ரூபாயும் வசூலிக்கலாம் என அரசு கட்டணம் நிர்ணயித்துள்ளது.

 

 

அதேநேரத்தில், மலைப்பாதையில் குறைந்தபட்ச கட்டணம் 60 ரூபாயாகவும், கூடுதலாக ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் 30 ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை வழக்கமான கட்டணத்தில் ஒன்றரை மடங்கு கட்டணம் வசூலிக்கவும், காத்திருக்கும் ஒவ்வொரு நிமிடத்துக்கும் 1 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon