--- --:--:-- --

தென் மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும்..!

5

மிழகத்தின் தென் மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

 

இந்த மையம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தென்மேற்கு வங்கக்கடலில் தெற்கு பகுதி மற்றும் அதை ஒட்டிய இந்தியப்பெருங்கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதாக கூறப்பட்டு உள்ளது.

 

இதன் காரணமாக அடுத்த 3 நாட்களுக்கு தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது. வட தமிழகத்தில் சில நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் என கூறப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon