தமிழகத்தின் 7 மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு..!
தமிழகத்தின் 7 மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. குமரிக்கடல் மற்றும் இலங்கை கடற்கரை பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதனால் இன்றும், நாளையும் தென்தமிழகம் வட கடலோர மாவட்டங்களில் அநேக இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
மேலும் விழுப்புரம், கடலூர், நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் புதுச்சேரி காரைக்கால் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை புறநகர் பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கி அக்டோபர் 1ஆம் தேதி முதல் இன்று வரை தமிழகம் புதுச்சேரியில் இயல்பை விட 8 சதவீதம் அதிகமாக மழை பெய்துள்ளது.
சென்னையை பொருத்தவரை இயல்பை விட 41 சதவீதம் அதிகமாக மழை பதிவாகியுள்ளது.






