--- --:--:-- --

சிறுமி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் அரசியல்வாதி,ஓய்வு பெற்ற டி‌எஸ்‌பிக்கு சம்பந்தம்..!

1

சென்னை வண்ணாரப்பேட்டை 15 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் மேலும் பல முக்கிய பிரமுகர்களும் சிக்கியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய அவரது உறவுப் பெண் சைக்கிள் மற்றும் இடைத்தரகர்களும் உட்பட 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

சிறுமி விவகாரத்தில் பாஜக பிரமுகரான வண்ணாரப்பேட்டை ராஜேந்திரன் காவல் ஆய்வாளராக இருந்த புகழேந்தி இருவரும் பிடிபட்டனர். இந்த விவகாரத்தில் ஓய்வு பெற்ற டிஎஸ்பி மருத்துவர் உள்ளிட்டோரும் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கைது செய்யப்பட்ட இடைத்தரகர்களிடம் நடைபெற்ற விசாரணையில் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

 

எனவே பட்டியலில் உள்ள அரசியல் பிரமுகர்கள் உட்பட முக்கிய நபர்களிடம் விசாரணை நடத்த 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon