பொன்னை அணை திறப்பு..! கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை..!
வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே உள்ள பொன்னை அணையில் நீர் மட்டம் உயர்ந்ததால் உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. நிவர் புயல் காரணமாக விடிய விடிய மழை பெய்ததால் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது.
தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால் அணையின் பாதுகாப்பை கருதி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்குமாறு மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார்.






