ஊரடங்கு தளர்வுகள் குறித்து முதல்வர் நாளை ஆலோசனை..!
தமிழகத்தில் டிசம்பர் மாத ஊரடங்கு தளர்வுகள் குறித்து மாவட்ட ஆட்சியர்கள் மருத்துவ நிபுணர் குழுவுடன் வரும் 28ஆம் தேதி தமிழக முதலமைச்சர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். நவம்பர் மாதத்திற்கான ஊரடங்கு விரைவில் முடிவுக்கு வருகிறது.
கடைசியாக திரையரங்குகள் திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது. கொரொனா பரவலைத் தடுக்க மத ரீதியான விழாக்கள், அரசியல் கூட்டங்களுக்கு தொடர்ந்து தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் டிசம்பர் மாத ஊரடங்கு தயாரிப்புகள் குறித்து வரும் 28ஆம் தேதி மாவட்ட ஆட்சியர்கள், மருத்துவ நிபுணர் குழுவுடன் தமிழக முதலமைச்சர் ஆலோசனை நடத்த உள்ளார்.
தமிழகத்தில் கொரொனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து வரும் சூழலில் அடுத்த கட்ட நகர்வுகள் குறித்து இந்த ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.






