ஜப்பானில் வைரமுத்து, பவளம் பதிந்து விலை உயர்ந்த மாஸ்குகள்..!
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வைரமுத்து, பவளம் பொதிந்து விலை உயர்ந்த மாஸ்குகளை அணிந்து மக்கள் கொரொனாவை ஆடம்பரமாக எதிர்கொண்டுள்ளனர். 0.7 கேரட் வைரம் அடங்கிய மாஸ்க்கை உள்ளூர் நகை கடைக்காரர் ஒருவர் தயாரித்திருக்கிறார்.
இதில் 300 துண்டு படிகங்களும், 330 ஜப்பானிய முத்துக்களும் பதிக்கப்பட்டுள்ளன. இதன் விலையைக் 9,600 டாலர்களாகும். இதைவிட அதிக விலையுள்ள மாஸ்குகளும் உள்ளன.
இஸ்ரேல் நகை கடைக்காரர் ஒருவர் இதே போன்று 18 கேரட் தங்கத்தால் ஆன விலை உயர்ந்த மாஸ்க்கை தயாரித்துள்ளார். உலகிலேயே விலை உயர்ந்த மாஸ்க் அது என்று கருதப்படுகிறது.






