--- --:--:-- --

கார், இருசக்கர வாகனங்களை திருடி விற்று வந்த நபர் கைது..!.

9

சென்னை அருகே ஆடம்பர வாழ்க்கைக்காக கார்களையும் இருசக்கர வாகனங்களையும் திருடி விற்று வந்த நபர் கைது செய்யப்பட்டார். நெற்குன்றத்தை சேர்ந்த பரந்தாமன் என்பவர் குடும்பத்துடன் கோவிலுக்கு சென்றுவிட்டு திரும்பியபோது அவரது காரை காணவில்லை.

 

இதனால் அதிர்ந்து போன அவர் திருமுல்லைவாயில் காவல்துறையினரிடம் புகார் அளித்தார். அதன்படி வியாசர்பாடி கெனடி நகரை சேர்ந்த சரண் என்ற கால் டாக்ஸி ஓட்டுனரை பிடித்து விசாரித்தனர்.

 

காரை திருடியதை ஒப்புக்கொண்ட சரண் ஆடம்பர வாழ்க்கைக்காக வாகனத்தில் ஈடுபட்டதாக ஒப்புக்கொண்டார். இதையடுத்து சரணை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் இருந்து 4 கார்கள் ஒரு மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon