--- --:--:-- --

வரும் 29ஆம் தேதி புதிதாக காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது..!

10

ங்கக் கடலில் உருவான நிவர் புயல் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்று புதுச்சேரியில் கரையை கடந்த நிலையில் வரும் 29ஆம் தேதி புதிதாக காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

புயல் காரணமாக தமிழகத்தின் கடலூர் மாவட்டம் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது. வேலூர், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இருப்பதால் மக்களின் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பித்தது.

 

தென் மாவட்டங்களிலும் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மாமல்லபுரத்திற்கு காரைக்காலுக்கும் இடையில் நிவர் புயல் கரையை கடக்கும் என்று கூறப்பட்ட நிலையில் புதுச்சேரியில் கரையை கடந்தது.

 

இந்த சூழலில் தெற்கு வங்க கடலில் வரும் 29ஆம் தேதி புதிதாக காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்தடுத்த நாட்களில் தீவிரமடைந்து மேற்கு நோக்கி நகரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon