--- --:--:-- --

எறும்புகள் மீது மண்ணெண்ணெய் ஊற்றிய போது தீ பற்றியதில் உயிரிழந்த இளம்பெண்..!

3

சென்னையில் வீட்டில் எறும்புகள் மீது மண்ணெண்ணெய் ஊற்றிய போது எதிர்பாராத வகையில் ஆடையில் தீப்பற்றியதில் இளம் பெண் உயிரிழந்துள்ளார். சென்னை அமைந்தகரை பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்த இளம்பெண் சங்கீதா மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார்.

 

இவர் வீட்டில் கொசுக்களை விரட்ட பாத்திரத்தில் தண்ணீரில் போட்டு புகை போட்டதுடன் சுவர் ஓரத்தில் சென்று எறும்புகள் மீது மண்ணெண்னை ஊற்றியதாக கூறப்படுகிறது. புகைமூட்டம் போட்ட பாத்திரத்தின் மீது மண்ணெண்ணெய் பட்டதும் தீப்பற்றி சங்கீதாவின் ஆடைகளில் தீ பரவியுள்ளது.

 

அவரது அலறலைக் கேட்டு காப்பாற்ற முயன்றும் அதற்குள் சங்கீதா உடல் முழுவதும் தீ பற்றியது. தீக்காயம் அடைந்த அவரை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் அவர் உயிரிழந்துள்ளார். இதுகுறித்து அமைந்தகரை காவல்துறையினர் வழக்குப் பதிந்து சங்கீதாவின் குடும்பத்தினரிடம் விசாரித்து வருகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon