தமிழகத்தில் 14 பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்கள் இல்லாத நிலை
தமிழகத்தில் உள்ள 14 மாநிலப் பல்கலைக்கழகங்கள் கடந்த மூன்று முதல் நான்கு ஆண்டுகளாகத் துணைவேந்தர்கள் மற்றும் முறையான ஆட்சிக்குழு நிர்வாகம் இல்லாமல் செயல்பட்டு வருவது குறித்து சென்னை உயர்நீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது.
தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைப்புக் குழுக்களால் பல்கலைக்கழகங்களையும் அதன் கீழ் இயங்கும் கல்லூரிகளையும் முழுமையாக நிர்வகிக்க முடியாது என்று நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார். இந்த நிலை தொடர்ந்தால் உயர்கல்வியின் தரமும் நிர்வாகச் செயல்பாடுகளும் பாதிக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
இதுதொடர்பாக தமிழக அரசின் உயர்கல்வித்துறை செயலரை வழக்கில் இணைத்த நீதிமன்றம், 14 பல்கலைக்கழகங்களிலும் இயல்பான நிர்வாகத்தை மீட்டெடுக்க இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து நவம்பர் 17ஆம் தேதிக்குள் விளக்கம் அளிக்க உத்தரவிட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




