--- --:--:-- --

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு 9.8 லட்சம் பேர் விண்ணப்பம்

images - 2026-11-04T180941.730

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 4 தேர்வுக்கு இதுவரை சுமார் 9.8 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மொத்தம் 6,574 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நாளை நவம்பர் 5ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.

 

 

கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் இந்த அறிவிப்பில் இடம்பெற்றுள்ளன. பத்தாம் வகுப்பு கல்வித்தகுதி கொண்டவர்களும் குறிப்பிட்ட பணிகளுக்கான நிபந்தனைகளுக்கு உட்பட்டு விண்ணப்பிக்கலாம்.

 

விண்ணப்பிக்காத தகுதியுள்ள தேர்வர்கள் கடைசி நேர நெரிசலைத் தவிர்த்து உடனடியாக விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்தத் தேர்வுக்கான எழுத்துத் தேர்வு 2027 ஜனவரி 10ஆம் தேதி நடைபெற உள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon