--- --:--:-- --

கொரோனா தடுப்பு மருந்து விநியோகம் தொடர்பாக பிரதமர் மோடி நாளை ஆலோசனை..!

4

கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனைகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. டிசம்பர் இரண்டாவது வாரம் அல்லது ஜனவரியில் இந்தியாவுக்கு தடுப்பு மருந்து பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

இந்த நிலையில் அவசர சிகிச்சைகளுக்கு அந்த மருந்து பயன்படுத்துவது குறித்தான சாத்தியங்களை மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. இது தொடர்பாக அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் நாளையும், நாளை மறுதினமும் காணொளி வாயிலாக பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொள்கிறார்.

 

முதல் நாளில் 8 மாநில முதலமைச்சர்கள் ஆலோசனையில் கலந்து கொள்கின்றனர். இரண்டாவது நாளில் எஞ்சிய மாநில முதலமைச்சர்கள், யூனியன் பிரதேசங்களின் முதலமைச்சருடன் மோடி ஆலோசனை நடத்த இருக்கிறார்.

 

கொரொனா தடுப்பு நடவடிக்கைகள் ஊரடங்கு தளர்வுகளிடையே கொரொனா தடுப்பு மருந்து எப்படி பயன்படுத்துவது என்று மாநில அரசுகளுக்கு பிரதமர் ஆலோசனைகளை வழங்க உள்ளார். மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி வெளியூர் சுற்றுப்பயணத்தில் இருந்தாலும் நாளை ஆலோசனையில் பங்கேற்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon