--- --:--:-- --

பொதுப் பிரிவினருக்கான மருத்துவ கலந்தாய்வு இன்று நடைபெறுகிறது..!

2

பொதுப் பிரிவினருக்கான மருத்துவ கலந்தாய்வு சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று காலை 9 மணிக்கு தொடங்குகிறது. இந்த கலந்தாய்வு வரும் டிசம்பர் 4ஆம் தேதியுடன் முடிவடைகிறது.

 

நீட் தேர்வில் 710 மதிப்பெண்கள் முதல் 631 வரை மதிப்பெண்கள் எடுத்த 361 பேர் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். தற்போதைய நிலவரப்படி தமிழகத்தில் உள்ள 26 அரசு மருத்துவக் கல்லூரிகள் 2,747 இடங்கள் உள்ளன. இதில் பொது பிரிவில் மட்டும் 864 இடங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இவை தவிர 14 சுய மருத்துவக்கல்லூரிகளில் பொதுப்பிரிவினருக்கு 329 இடங்கள் இருக்கின்றன. இரு அரசு பல் மருத்துவக் கல்லூரிகள் 151 இடங்களிலும் 64 இடங்கள் பொதுப்பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. 18 தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 985 இடங்களில் பொதுப்பிரிவினருக்கு 305 இடங்கள் வழங்கப்பட உள்ளன.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon