--- --:--:-- --

ஒரு மெகாவாட் திறனுக்கு மேற்பட்ட புதிய சூரிய மின் திட்டங்களுக்கு பேட்டரி சேமிப்பு கட்டாயம்

images - 2026-11-04T175755.929

தமிழகத்தில் புதிதாகத் தொடங்கப்படும் ஒரு மெகாவாட் மற்றும் அதற்கு மேற்பட்ட திறனுடைய சூரிய மின் திட்டங்களுக்கு பேட்டரி மின்சாரச் சேமிப்பு வசதி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்காகத் தமிழக அரசு புதிய பேட்டரி மின்சாரச் சேமிப்புக் கொள்கையை அறிமுகப்படுத்தியுள்ளது.

 

 

2029ஆம் ஆண்டுக்குள் 10 ஜிகாவாட் மணி அளவிலான மின்சாரச் சேமிப்புத் திறனை உருவாக்குவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். பகல் நேரங்களில் அதிகமாக உற்பத்தியாகும் சூரிய மின்சாரத்தைச் சேமித்து, மாலை மற்றும் அதிக மின்தேவை ஏற்படும் நேரங்களில் பயன்படுத்த முடியும்.

 

 

புதிய திட்டங்களுக்கு அவற்றின் நிறுவப்பட்ட திறனில் குறைந்தபட்சம் 10 சதவீதம் அளவிலான பேட்டரி சேமிப்பு வசதி இருக்க வேண்டும். மேலும், தகுதியான பேட்டரி சேமிப்புத் திட்டங்களுக்கு 10 ஆண்டுகளுக்கு மின்பரிமாற்றக் கட்டணச் சலுகையும் வழங்கப்பட உள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon