--- --:--:-- --

கைவிடப்பட்ட ஆழ்துளைக் கிணறுகளை மூட உயர்நீதிமன்றம் உத்தரவு

images - 2026-11-04T175241.212

தூத்துக்குடி மாவட்டத்தில் பயன்பாடின்றிக் கைவிடப்பட்டுள்ள ஆழ்துளைக் கிணறுகள், திறந்தவெளிக் கிணறுகள் மற்றும் குவாரிக் குழிகளை ஆறு வாரங்களுக்குள் மூட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

 

 

பொதுமக்கள் நடமாடும் சாலையோரங்களில் இத்தகைய கிணறுகளும் குழிகளும் திறந்த நிலையில் இருப்பதால் மனிதர்கள் மட்டுமின்றி கால்நடைகளும் விபத்தில் சிக்கும் அபாயம் இருப்பதாகப் பொதுநல மனுவில் தெரிவிக்கப்பட்டது.

 

 

இதனை விசாரித்த நீதிபதிகள், மாவட்டம் முழுவதும் உரிய ஆய்வு செய்து ஆபத்தான இடங்களைப் பாதுகாப்பாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், ஆறு வாரங்களுக்குப் பிறகு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon