மடப்புரம் கோயில் காவலர் அஜித்குமார் மரண வழக்கு
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் கோயில் காவலராகப் பணியாற்றிய அஜித்குமார் காவல் விசாரணையின்போது உயிரிழந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள நான்கு காவல்துறையினரின் மனுக்களை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. மேலும், இந்த வழக்கின் விசாரணையை ஒன்பது மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட விசாரணை நீதிமன்றத்திற்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 2025ஆம் ஆண்டு ஜூன் மாதம் நகைத் திருட்டு தொடர்பான விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட அஜித்குமார் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வரும் நிலையில், தற்போது உயர்நீதிமன்றம் விசாரணையை விரைவுபடுத்த உத்தரவிட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




