ராகினியும், சஞ்சனா கல்ராணியும் சிறையில் ஆட்டம் பாட்டத்துடன் பொழுதை கழித்துள்ளனர்..!
கர்நாடகாவில் போதைப்பொருள் வழக்கில் கைதாகியுள்ள நடிகைகள் ராகினியும், சஞ்சனா கல்ராணியும் சிறையில் ஆட்டம் பாட்டத்துடன் பொழுதை கழித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த வழக்கில் இருவருக்கும் ஜாமீன் கிடைக்காததால் சிறையிலேயே இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
முதலில் சக கைதிகள், காவலர்களுடன் நடிகைகள் இருவரும் தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்பட்ட நிலையில் தற்போது வேறு வழியின்றி அவர்களுடனேயே நட்பு பாராட்டி ஆடிப்பாடி பொழுதை கழிப்பதாக சொல்லப்படுகிறது.






