தமிழக ராணுவ வீரர் கருப்புசாமி உடலுக்கு இறுதி அஞ்சலி..!
லடாக் எல்லையில் சாலைவிபத்தில் உயிரிழந்த தமிழக ராணுவ வீரர் கருப்புசாமி உடலுக்கு அவரது சொந்த ஊரில் ஏராளமானோர் திரண்டு இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த ராணுவ வீரர் கருப்பசாமி கடந்த 19ஆம் தேதி விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.
அவரது உடல் விமானம் மூலம் மதுரை கொண்டு வரப்பட்டு அங்கிருந்து சாலை மார்க்கமாக சொந்த கிராமமான தெற்கு திட்டகுளத்திற்கு கொண்டுவரப்பட்டது. அங்கு முழு ராணுவ மரியாதையுடன் 21 குண்டுகள் முழங்க கருப்பசாமியின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
இறுதி நிகழ்ச்சியில் செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில்ராஜ், தூத்துக்குடி எஸ்பி ஜெயக்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் ராணுவ வீரர் கருப்பசாமியின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தியுள்ளனர்.






