ரயில்களில் பெண்களின் பாதுகாப்புக்காக என் தோழி என்ற பெயரில் புதிய திட்டம்..!
ரயில்களில் பயணம் செய்யும் பெண்களின் பாதுகாப்புக்காக என் தோழி என்ற பெயரில் புதிய திட்டத்தை இந்திய ரயில்வே தொடங்கியுள்ளது. இந்த திட்டத்தின்படி ஒரு பெண் ரயிலில் ஏறும் இடத்தில் இருந்து இறங்கும் வரை அவரது பாதுகாப்புக்கான ஏற்பாடுகள் செய்யப்படும்.
ரயிலில் செல்லும் பெண் பயணிகள் குறிப்பாக தனியாக செல்லும் பயணிகளை அணுகும் ரயில்வே பாதுகாப்பு படையினர் பயணத்தின் போது எப்படி எல்லாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்துவார்கள்.
பயணத்தின் போது பிரச்சனை எதுவும் ஏற்பட்டால் 182 என்ற எண்ணுக்கு அழைத்து உதவி கோரலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. இது போன்றவர்களுக்கு விரைந்து உதவி வழங்கப்படுவதுடன் இந்த நடைமுறை சரியாக அனுசரிக்கப்படுகிறதா என மூத்த அதிகாரிகள் கண்காணிப்பர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் பெண் பயணிகளின் கருத்துக்களை கேட்டு அதனடிப்படையில் தேவையான மாற்றங்கள் மேற்கொள்ளப்படும் என்றும் ரயில்வே தெரிவித்துள்ளது. தென் கிழக்கு ரயில்வேயில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த திட்டம் பெண் பயணிகளுக்கு பயனுள்ளதாக இருந்ததால் இது நாடு முழுவதும் ஏற்படுத்தப்படும்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X





