2021 ஆம் ஆண்டில் 23 நாட்கள் அரசு விடுமுறை என தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது..!
தமிழக அரசு 2021 ஆம் ஆண்டுக்கான அரசு விடுமுறை நாட்களுக்கான அரசாணையை தமிழக அரசு தற்போது வெளியிட்டுள்ளது. 2021 ஆம் ஆண்டில் 23 நாட்கள் அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை தலைமை செயலாளர் வெளியிட்டுள்ளார்.
அரசு விடுமுறை நாட்களை பொருத்தவரை ஆங்கில புத்தாண்டு, பொங்கல், திருவள்ளுவர் தினம், உழவர் திருநாள், குடியரசு தினம், புனித வெள்ளி, புதிய வருடப்பிறப்பு, மகாவீர் ஜெயந்தி, மேதினம், ரம்ஜான், பக்ரீத், சுதந்திர தினம், கிருஷ்ண ஜெயந்தி, மொஹரம் என 23 நாட்களை அரசு விடுமுறை நாட்களாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.






