--- --:--:-- --

பத்தாம் வகுப்பு தனி தேர்வு முடிவுகளில் 22 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி..!

1

பத்தாம் வகுப்பு தனி தேர்வு முடிவுகளில் 22 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி அடைந்து இருப்பதால் மாணவர்களின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கொரொனா காரணமாக தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன.

 

அதேநேரத்தில் தனியார் நிறுவனங்கள் மூலம் பயின்றவர்களுக்கு அண்மையில் தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வை 39 ஆயிரம் பேர் எழுதி இருந்த நிலையில் சுமார் 8,000 பேர் மட்டுமே தேர்ச்சி என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இதனால் தனித் தேர்வு எழுதிய மாணவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். தனித் தேர்வுகளுக்கு அநீதி இழைக்கப்பட்டதாக தேர்வு எழுதியவர்களின் பெற்றோர் புகார் தெரிவித்துள்ளனர். பத்தாம் வகுப்பு பன்னிரண்டாம் வகுப்புக்கு நடத்தப்பட்ட துணை தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன.

 

11ஆம் வகுப்பு துணை தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மறு கூட்டல் மற்றும் விடைத்தாள் நகலுக்கு நவம்பர் 3, 4 ஆம் தேதிகளில் பதிவு செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon