--- --:--:-- --

கொரொனா தடுப்பூசிகளின் இரண்டு மற்றும் மூன்றாம் கட்ட சோதனை நடைபெறுகிறது..!

1.1

ஷ்யாவில் தயாரிக்கப்பட்ட கொரொனா தடுப்பூசிகளின் இரண்டு மற்றும் மூன்றாம் கட்ட சோதனையை இந்தியாவில் மேற்கொள்ள டாக்டர் ரெட்டிஷ் நிறுவனம் ஒப்புதல் பெற்றுள்ளது.

 

ரஷ்யாவின் ஸ்புட்னிக் தடுப்பூசிகளை சோதிக்க இந்திய மருந்து கட்டுப்பாட்டு இயக்குனரகம் இந்த அனுமதி அளித்து இருப்பதாக டாக்டர் ரெட்டிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசி அந்த நாட்டில் 40 ஆயிரம் பேருக்கு கொடுக்கப்பட்டு மூன்றாம் கட்ட பரிசோதனை நடைபெற்று வருகிறது.

 

இந்நிலையில் இந்தியாவில் அதை சோதனை செய்து பின்னர் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர ஹைதராபாத்தை சேர்ந்த டாக்டர் ரெட்டிஸ் நிறுவனம் உரிமம் பெற்றுள்ளது. தடுப்பூசியின் மூன்றாம் கட்ட பரிசோதனை ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த வாரம் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon