விஜய்சேதுபதி ரசிகர் மன்ற மாநில தலைவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம்..!

Publish by: செய்திப்பிரிவு --- Photo :


புதுச்சேரியில் விஜய் சேதுபதி ரசிகர் மன்ற மாநில தலைவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி மாநில விஜய் சேதுபதி ரசிகர் மன்றத்தின் தலைவராக இருந்த மணிகண்டன் என்பவர் நேற்று இரவு தனது இருசக்கர வாகனத்தில் மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள தனது வீட்டுக்கு சென்று கொண்டு இருந்தார்.

 

அப்போது பின்தொடர்ந்து வந்த 4 பேர் கொண்ட மர்ம கும்பல் நெல்லிதோப்பு பகுதியில் மணிகண்டனை வழிமறித்து சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடினார். இதில் படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தார். இதுகுறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.


Leave a Reply