தந்தை கொரொனாவால் உயிரிழந்ததால் ஆம்புலன்ஸ் ஓட்டுனரை தாக்கிய மகன்..!

Publish by: செய்திப்பிரிவு --- Photo :


ன்னியாகுமரி அருகே கொரோனாவால் உயிரிழந்த நபரின் உடலை கொண்டு வந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

படந்தாலுமூடு பகுதியை சேர்ந்த கிணறு தோண்டும் கூலித்தொழிலாளி குட்டப்பன் கொரொனா உறுதியாகி ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

 

தந்தையை ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதே கொரோனா பாதிப்பு ஏற்பட காரணம் எனக் கூறி அவரது உடலை கொண்டு வந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர் பென்ஜோஷை குட்டப்பனின் மகன் அரிவாளால் வெட்டிவிட்டு சுகாதாரத்துறையினர் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

 

இதனால் சுகாதாரத்துறை அதிகாரிகள் யாரும் உடலை அடக்கம் செய்ய முன்வராததால் பாஜகவினர் உடலை அடக்கம் செய்தனர். மேலும் காயமடைந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


Leave a Reply