உலகின் மிக உயரிய விருதான நோபல் பரிசு இன்று முதல் அறிவிக்கப்படவுள்ளது..!

Publish by: செய்திப்பிரிவு --- Photo :


லகின் மிக உயரிய விருதுகளில் ஒன்றாக கருதப்படும் நோபல் பரிசு இன்று முதல் ஒவ்வொன்றாக அறிவிக்கப்படவுள்ளது. 1901 ஆம் ஆண்டு முதன் முதலில் 5 பிரிவுகளின் கீழ் நோபல் பரிசு வழங்கப்பட்டது.

 

இதையடுத்து 1969 ஆம் ஆண்டு ரிக்ஸ் வங்கி நன்கொடையாக அளித்த பணத்தை கொண்டு நோபல் பட்டியலில் பொருளாதாரத்துக்கான பரிசு சேர்க்கப்பட்டது. ஆண்டுக்கு ஒருமுறை 6 பிரிவுகளின் கீழ் தகுதியானவர்களை தேர்ந்தெடுத்து நோபல் பரிசு வழங்கப்படுகிறது.

 

இந்த ஆண்டு நோபல் பரிசுக்காக 211 தனிநபர்கள் மற்றும் 107 அமைப்புகள் என மொத்தம் 318 பேர் நோபல் பரிசுக்கான போட்டியில் உள்ளனர். இவர்களில் தகுதியானவர்கள் திங்கள்கிழமை முதல் அறிவிக்கப்பட உள்ளனர். மருத்துவத்திற்கான நோபல் பரிசு 5 ஆம் தேதியும், இயற்பியல் துறைக்கான விருது 6ம் தேதியும், வேதியியலுக்கு 7ம் தேதியும், இலக்கியத்திற்கான நோபல் பரிசு எட்டாம் தேதி அறிவிக்கப்பட உள்ளன.

 

 

அமைதிக்கான நோபல் பரிசு 9ஆம் தேதியும், அக்டோபர் 10ஆம் தேதியன்று பொருளாதாரத்திற்கான நோபல் பரிசும் அறிவிக்கப்பட உள்ளது.


Leave a Reply