பிரியங்காவின் உடையை பிடித்து இழுத்த காவலர்..!

Publish by: செய்திப்பிரிவு --- Photo :


காவலர் ஒருவர் பிரியங்கா காந்தியின் உடையை பிடித்து இழுத்து முரட்டுத்தனமாக நடந்து கொண்டதற்காக உத்தரப் பிரதேச போலீஸ் மன்னிப்பு கேட்டுள்ளது. மேலும், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்றும் நொய்டா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

 

உத்திரப்பிரதேச மாநிலத்தில் இளம்பெண் கொல்லப்பட்ட நிலையில் அவரது குடும்பத்தினரை சந்திக்க ராகுல் காந்தியும், பிரியங்காவும், காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உடன் அங்கு சென்றுள்ளார். அப்போது நொய்டா பகுதியில் பிரியங்கா காந்தியின் உடையை காவலர் ஒருவர்முரட்டு தனமாக பிடித்து இழுத்தது பெரும் சர்ச்சையாக உள்ளது.

 

இதற்கு கண்டனங்கள் எழுந்தன. இந்த நிலையில் இந்த நிகழ்வுக்கு காவல்துறை மன்னிப்பு கேட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக மூத்த காவல்துறை பெண் அதிகாரி ஒருவர் விசாரணை நடத்துவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Leave a Reply