நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை சுத்தியலால் அடித்து கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட கணவன்..!

Publish by: செய்திப்பிரிவு --- Photo :


டலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் மனைவியை சுத்தியால் அடித்து கொன்று விட்டு விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. புவனகிரியை சேர்ந்த தங்கவேலு உயர் ரத்த அழுத்தத்தால் மூளை நரம்பு பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஊரடங்கால் மருந்துகள் கிடைக்காமல் உடல் நிலை மோசமடைந்ததாக கூறப்படுகிறது.

 

மேலும் சந்தேகத்தின் பேரில் மனைவி செல்வராணியிடம் சண்டையிட்டு வந்ததாகச் சொல்லப்படும் நிலையில் நேற்றிரவு வாக்குவாதம் முற்றி மனைவியை சுத்தியால் அடித்து கொன்று விட்டு பூச்சி மருந்தை குடித்து தங்கவேலு உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

 

மாமியார் வீட்டுக்கு சென்று திரும்பிய மகன் வேல்முருகன் பெற்றோர் உயிரிழந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தான். அவர்கள் அளித்த தகவலின்பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


Leave a Reply