--- --:--:-- --

காலிப்பணியிடங்கள் லட்சக்கணக்கில் உள்ளன,  குரூப் 4 அறிவிப்பை மாற்ற வேண்டும் – தினகரன்

13

லட்சக்கணக்கில் காலிப்பணியிடங்கள் இருக்கும் நிலையில், அவற்றை நிரப்புவதற்கான அறிவிப்பை சொற்ப எண்ணிக்கையிலான பணியிடங்களுக்கு மட்டும் வெளியிடுவது ஏன் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

 

 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசு துறைகளில் அதிகப்படியான காலிப்பணியிடங்கள் உள்ள நிலையில், அவற்றை நிரப்பும் வகையில் டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பாணையைத் திருத்தி வெளியிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

 

மேலும், காலியாக உள்ள பணியிடங்களை உரிய முறையில் கணக்கிட்டு, இளைஞர்களுக்கு அதிகளவில் வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் குரூப் 4 தேர்வு அறிவிப்பில் கூடுதல் பணியிடங்களை சேர்க்க வேண்டும் என்றும் டிடிவி தினகரன் கேட்டுக்கொண்டுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon