வி.எஸ். பாபுவின் உண்மையான உடல்நிலை என்ன? – கிருஷ்ணசாமி கேள்வி
புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ”கடந்த சில வருடங்களுக்கு முன்பு, ஒரு முக்கியமான தலைவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்துப் பல்வேறு விதமான விமர்சனங்களும், அதை விசாரிக்கவே ஒரு நீதிபதி தலைமையில் ஆணையமும் அமைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.
எனவே, வி.எஸ். பாபுவுக்கு இப்போது அளிக்கப்படக்கூடிய சிகிச்சை அவர் முழுமையாகக் குணம்பெற்றுத் திரும்புவதற்கு உண்டான வகையில் இருக்கிறதா? இல்லை, இங்கு அதற்கான சிகிச்சை இல்லாதபோது, அரசினுடைய செலவிலேயே வெளிநாடுகளுக்கு அழைத்துச் சென்று சிகிச்சையளிக்க வேண்டிய சூழல் இருக்கிறதா? என்பது குறித்து தமிழ்நாடு அரசு ஒரு வெள்ளை அறிக்கையை உடனடியாக வெளியிட வேண்டும்.
இதுபோன்று நாட்கணக்கில், மாதக்கணக்கில் மக்கள் பிரதிநிதிகளை மருத்துவமனைகளில் ‘சிகிச்சை’ என்ற பெயரில் தொடர்ந்து கமுக்கம் காத்து வருவது முறையானதல்ல. எனவே, தமிழ்நாடு அரசு அவரது இன்றைய உடல்நலம், அவருக்கு மேற்கொண்டு அளிக்கப்பட வேண்டிய சிகிச்சை, அதற்காக அரசு எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் குறித்து உடனடியாக வெளிப்படுத்த வேண்டும் என வலியுறுத்துகிறேன், என்று பதிவிட்டுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




