--- --:--:-- --

மாத்திரை கவரில் இந்தி இருப்பது பற்றி அரசு மருத்துவமனை அதிகாரிகள் தகவல்!

8

கோவை அரசு மருத்துவமனையில் வழங்கும் மாத்திரை கவரில் இந்தி எழுத்துக்கள் இடம்பெற்று உள்ளன. இதற்கு தமிழ் ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். கோவை அரசு மருத்துவமனையில் கோவை மட்டுமின்றி திருப்பூர், ஈரோடு, நீலகிரி உள்பட வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் மற்றும் கேரளம் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் தினமும் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இங்கு சிகிச்சை பெரும் நோயாளிகளுக்கு மருத்துவர்கள் மாத்திரைகளை பரிந்துரை செய்கின்றனர். அதை நோயாளிகள் மருந்து வழங்கும் இடத்தில் பெற்றுக் கொள்கின்றனர்.

 

 

மாத்திரைக்கு அவர்களின் காலை, மதியம், மாலை, இரவு என மாத்திரை பயன்படுத்தும் முறை உள்ளிட்ட விவரங்கள் அச்சிடப்பட்டு இருக்கும். இந்நிலையில் சமீபத்தில் கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு வழங்கப்பட்ட மாத்திரை அவர்களின் தமிழ், ஆங்கிலம் மொழிகளுடன் இந்தி எழுத்துக்களும் இடம்பெற்று இருந்தது. அதை பார்த்த நோயாளிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

 

அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு வழங்கப்படும் மாத்திரை கவரில் இந்தி மொழி இடம் பெற்று இருப்பதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதோடு இந்தி மொழி திணிக்கப்படுவதாகவும் தமிழ் ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் கோவை அரசு மருத்துவமனையில் இந்தி மொழியுடன் வழங்கப்பட்ட மாத்திரை கவர்கள் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இதனால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

 

 

இந்த விவகாரம் மருத்துவமனை நிர்வாகத்தின் கவனத்திற்குச் சென்ற நிலையில் மருத்துவமனை முதல்வர் உத்தரவின் பேரில் நேற்று இரவு இந்தி மொழி இடம் பெற்று இருந்த மாத்திரை கவர்கள் மாற்றப்பட்டன. இதை அடுத்து இந்தி மொழி இல்லாத மாத்திரை கவருகள் நோயாளிகளுக்கு மாத்திரைகள் வழங்கப்பட்டது.

 

 

இதுகுறித்து அரசு மருத்துவமனை அதிகாரிகள் தகவலாக கூறும் போது, மாத்திரை கவர் குறித்த சர்ச்சை எழுந்தவுடன் முதல்வர் உத்தரவின் பேரில் மாத்திரைக்கு அவர்கள் மாற்றப்பட்டது. கடந்த 1 1/2 ஆண்டுகளுக்கு மேலாக இது போன்ற கவர்கள் தான் பயன்படுத்தி வருகிறோம். டெண்டர் அடிப்படையில் அவர்கள் பெறப்பட்டு வருகிறது. மூன்று மொழிகளில் ஏற்கனவே கவர்களில் இருந்த நிலையில் தற்போது தான் இந்த சர்ச்சை எழுந்து உள்ளது என்று தகவலாக தெரிவிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon