--- --:--:-- --

மகாளய அமாவாசை – சிறப்பு பேருந்துகள் இயக்கம்

4

மகாளய அமாவாசை மற்றும் வார இறுதி விடுமுறை நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக்கழகம் சார்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருச்சி, மதுரை, கோவை, திருநெல்வேலி உள்ளிட்ட இடங்களுக்கு நாளை (வெள்ளிக்கிழமை) 1,075 பேருந்துகளும், சனிக்கிழமை 845 பேருந்துகளும் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

கோயம்பேட்டிலிருந்து ஒசூர், பெங்களூரு, நாகை உள்ளிட்ட பகுதிகளுக்கு வெள்ளியன்று 210 பேருந்துகளும், சனி அன்று 180 பேருந்துகளும் இயக்கப்படவுள்ளன. மேலும், பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோவையிலிருந்து 200 சிறப்பு பேருந்துகளும், மாதவரத்தில் இருந்து நாள்தோறும் 145 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படவுள்ளன. விடுமுறை முடிந்து பயணிகள் சென்னை திரும்ப ஏதுவாக ஞாயிற்றுக்கிழமை அன்று 875 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

 

 

பயணிகள் கூட்ட நெரிசலைத் தவிர்க்க ஆன்லைன் மற்றும் செயலி மூலம் முன்பதிவு செய்து பயணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.இதேபோல், திருப்பதி திருமலையில் நடைபெறும் பிரம்மோற்சவ திருவிழாவை முன்னிட்டு, அக்டோபர் 8 முதல் அக்டோபர் 21 வரை பக்தர்களின் தேவைக்கேற்ப சென்னை, திருச்சி, சேலம், கோவை, மதுரை, புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு முக்கிய நகரங்களில் இருந்து தினமும் 150 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்றும் அரசு விரைவுப் போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குநர் அறிவித்துள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon