--- --:--:-- --

பிரபல நடிகர் நானா படேகர் காலமானார்..!

1

பிரபல பாலிவுட் நடிகரான நானா படேகர் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 75. கோவாவில் உள்ள தனது வீட்டில் மயங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட நடிகர் நானா படேகரை உடனடியாக மருத்துவ சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும், மருத்துவமனை கொண்டு வரும் வழியிலேயே அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்.

 

முதற்கட்ட ஆய்வின்படி, அவருக்குக் கடுமையான மாரடைப்பு ஏற்பட்டது. அவர் மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்ட பிறகு, மருத்துவர்கள் கிட்டத்தட்ட 45 நிமிடங்கள் அவரை மீண்டும் உயிர் பெறச் செய்ய முயன்றனர், ஆனால் எந்தப் பலனும் இல்லை. “45 நிமிடங்கள் தொடர்ச்சியாக சிபிஆர் (CPR) அளித்தும், அவரை மீண்டும் உயிர் பெறச் செய்ய முடியவில்லை.

 

 

ஒரு மருத்துவ-சட்ட வழக்கு (MLC) பதிவு செய்யப்பட்டுள்ளது, மேலும் பிரேதப் பரிசோதனை நடத்தப்படும், என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அவர் தமிழில் ரஜினிகாந்தின் காலா திரைப்படத்தில் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமடைந்தது குறிப்பிடத்தக்கது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon