கொரொனா விதியை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களை தடுத்து நிறுத்திய காவலர்..!

Publish by: செய்திப்பிரிவு --- Photo :


துரை திருமங்கலம் நகர் பகுதிக்கு முகக்கவசம் இல்லாமல் தனிமனித இடைவெளி இன்றி இரு சக்கர நான்கு சக்கர வாகனங்களில் ஊர்வலமாக வந்தவர்களை பெண் காவலர் தடுத்து நிறுத்தினார்.

 

மதுரை – கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் இருந்து திருமங்கலம் நகர் பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தம் வரையில் மருது சேனை அமைப்பினர் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அபாயகரமான முறையில் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனத்தில் ஊர்வலமாக வந்தனர்.

 

அவர்களை நகர் எல்லையிலேயே தடுத்து நிறுத்தியதிருமங்கலம் காவல் நிலைய பெண் காவல் ஆய்வாளர் கொரொனா சூழலில் கூட்டமாக இடைவெளியில்லாமல் ஊருக்குள் வர அனுமதி மறுத்தார். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.

 

ஊரைச் சுற்றி வந்து சில நிமிடங்களில் கலைந்து செல்ல மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கூறியதன் பேரில் அவர்கள் வந்து முழக்கமிட்டு பின்னர் கலைந்து சென்றனர். இதன் காரணமாக ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.


Leave a Reply