தமிழகத்தில் 8 மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு..!

Publish by: செய்திப்பிரிவு --- Photo :


டக்கு அந்தமான் மற்றும் மத்திய கிழக்கு வங்கக் கடலுக்கு அருகே புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி வருவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆந்திரா மற்றும் ஓடிசா கடலோர பகுதியில் நிலவும் வறட்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் 8 மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் கூறியுள்ளது.

 

வேலூர், ராணிப்பேட்டை ,திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி , கடலூர், சேலம், தர்மபுரி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

 

இதனிடையே வடக்கு அந்தமான் மற்றும் மத்திய கிழக்கு வங்கக் கடலுக்கு அருகே வரும் ஒன்பதாம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


Leave a Reply