மத்திய உணவு பாதுகாப்பு அதிகாரி எனக்கூறி பண வசூலில் ஈடுபட்ட நபர்..!

Publish by: செய்திப்பிரிவு --- Photo :


தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரத்தில் மத்திய உணவு பாதுகாப்பு அதிகாரி என்று கூறி கடைகளில் பண வசூலில் ஈடுபட்ட டிப்டாப் ஆசாமியை போலீசார் தேடி வருகிறார்கள். கடந்த 2ஆம் தேதி காரில் வந்த நபர் ஒவ்வொரு கடையாக சென்று பொருட்கள் தரமாக உள்ளதா கடைக்கு உரிமம் இருக்கிறதா என்றெல்லாம் கேட்டுள்ளார்.

 

டீக்கடைக்கு சென்று அவர்களை கிளாஸ் வாங்கியதற்கு பில் இருக்கிறதா என்று கேட்டால் இல்லை என்று கூறியதால் பண வசூலில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.

 

கடைக்கு தகுந்தவாறும் அதன் உரிமையாளர்களின் அணுகுமுறைக்கு தகுந்தவாறும் 100 ரூபாய் முதல் 2,000 ரூபாய் வரை வசூல் செய்த அந்த நபர் மீது சந்தேகம் கொண்ட ஒரு சிலர் மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதனை அடுத்து டிப்டாப் ஆசாமி அங்கிருந்து நிறுவியுள்ளார்.


Leave a Reply