இன்று மகாத்மா காந்தியின் 152 வது பிறந்த நாள் தினம்..!

Publish by: செய்திப்பிரிவு --- Photo :


நாட்டின் சுதந்திர போராட்டத்தை சரியான திசையை நோக்கி திருப்பியவர் அண்ணல் காந்தியடிகளின் அகிம்சை, எளிமை, ஆன்மீகம், தீண்டாமை ஒழிப்பு, மதுவிலக்கு போன்ற அவரது கொள்கைகள் எதிர்கால இந்தியாவின் தொலைதூர கலங்கரை விளக்கங்களாக திகழ்கின்றன.

 

புத்தர் ஆகியோரின் அகிம்சை கொள்கையால் ஈர்க்கப்பட்ட காந்தி ஒத்துழையாமை இயக்கம் மதக் கலவரங்களை அடுத்து உப்பு சத்தியாகிரகம், சுதேசி இயக்கம், வெள்ளையனே வெளியேறு போன்ற போராட்டங்களை அமைதி வழியில் முன்னின்று நடத்தினார். நமது பேச்சுக்கள், எழுத்துக்களால் நாட்டின் ஆன்மாவை நிலைக்கச் செய்து சுதந்திரப் போராட்டத்தை வெளிச்சத்திற்கு கொண்டு சென்ற காந்தி ஆங்கிலேய அரசை பணிய வைத்தார் என்பது வரலாறு.

 

அரசியலில் மட்டுமின்றி பொது வாழ்வில் தூய்மை, ஒழுக்கம் போன்ற பண்புகளை ஊற்றியதால் இன்று உலகிற்கே வழிகாட்டும் தலைவராகக் கருதப்படுகிறார்.


Leave a Reply