முக்கிய தலைவர்கள் பயணிப்பதற்காக வாங்கப்பட்டுள்ள அதிநவீன விமானம்…!

Publish by: செய்திப்பிரிவு --- Photo :


குடியரசுதலைவர் துணைக் குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமர் பயணிக்கும் வகையில் அமெரிக்காவில் இருந்து வாங்கப்பட்ட அதிநவீன பாதுகாப்பு வசதிகளுடன் கூடிய விமானம் டெல்லி வந்தடைந்தது. ஏர் இந்தியா 1 விமானங்களை போயிங் நிறுவனத்திடமிருந்து 8,400 கோடி ரூபாய் செலவில் இந்தியா வாங்கியிருக்கிறது.

 

இரு விமானங்களுக்கான ஆர்டர் கொடுக்கப்பட்ட நிலையில் முதல் விமானம் தற்போது டெல்லி வந்தடைந்தது. அதி நவீன தகவல் தொடர்பு பாதுகாப்பு வசதிகள் இந்த விமானத்தின் சிறப்பம்சங்களாகும். அமெரிக்க அதிபர் பயன்படுத்தும் ஏர் போர்ஸ் ஒன் விமானத்தை போன்றே இந்த விமானமும் வடிவமைக்கப்பட்டுள்ளது.


Leave a Reply