ஹத்ரஸ் பெண் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படவில்லையா..!

Publish by: செய்திப்பிரிவு --- Photo :


த்திரபிரதேச மாநிலம் ஹத்ரசில் பட்டியலின பெண் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொல்லப்பட்ட தாக குற்றச்சாட்டு உள்ள நிலையில் அந்த பெண் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப் படவில்லை என தடயவியல் அறிக்கையில் தெரியவந்துள்ளதாக உத்திரப்பிரதேச காவல்துறை கூடுதல் டிஜிபி தெரிவித்துள்ளார்.

 

பாரன்சிக் சயன்ஸ் லபொட்டரியின் தடயவியல் அறிக்கையை மேற்கோள் காட்டிய உத்திரப்பிரதேச மாநில கூடுதல் டிஜிபி அந்த பெண் கழுத்தில் ஏற்பட்ட காயத்தால் உயிரிழந்ததாக கூறியுள்ளார். மருத்துவ அறிக்கை வருவதற்கு முன்பே அரசையும், காவல்துறையையும் குறை கூறியது மோசமானது என்றும் அவ்வாறு செய்தவர்கள் அடையாளம் காணப் படுவார்கள் எனவும் கூறினார்.

 

பட்டியலின பெண் ஒருவர் கடந்த 14ஆம் தேதி ஹத்ரசில் நான்கு நபர்களால் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. டெல்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அந்தப் பெண் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.

 

 

அவரது உடல் அவசர அவசரமாக இரவோடு இரவாக தகனம் செய்யப்பட்டது. உறவினர்கள் இல்லாமல் காவல்துறையினர் தகனத்தை நடத்தியதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. ஆனால் உறவினர்களின் விருப்பத்தின்படியே உடல் உடனடியாக தகனம் செய்யப் பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

 


Leave a Reply