--- --:--:-- --

“ஒரே நாடு”.. “ஒரே ரேஷன் கார்டு” திட்டம்..! தமிழகத்தில் இன்று முதல் அமல்.. முதல்வர் எடப்பாடி தொடங்கி வைத்தார்!!

16

நாட்டின் எந்தப் பகுதியில் உள்ள ரேசன் கடையிலும் பொருட்களை வாங்கிக் கொள்ளும் வகையில், ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டம் தமிழகத்தில் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. சென்னை தலைமை செயலகத்தில் நடந்த விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இத்திட்டத்தை தொடங்கி வைத்தார்.

 

மத்திய அரசு அறிவித்துள்ள ஒரே நாடு, ஒரே ரேசன் கார்டு திட்டத்தில் இதுவரை தமிழகம் உள்ளிட்ட 25 மாநிலங்கள் இணைந்துள்ளன.  தமிழகத்தில் 2 கோடியே 9 லட்சம் ரேஷன் அட்டைகள் உள்ள நிலையில், திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் இந்த திட்டம் சோதனை முறையில் சில மாதங்களுக்கு முன் அமல்படுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து, 32 மாவட்டங்களில் இந்தத் திட்டம் இன்று முதல் அமலுக்கு வருகிறது.

 

இந்தத் திட்டத்தை தலைமைச் செயலகத்திலிருந்தபடி, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, காணொலிக்காட்சி மூலம் இன்று தொடங்கி வைத்தார்.
இதன் மூலம், ஸ்மார்ட் ரேஷன் அட்டை வைத்துள்ள யாரும், தமிழகத்தில் எந்த நியாயவிலைக் கடையிலும் அரிசி உள்ளிட்ட பொருட்களை வாங்கிக் கொள்ள முடியும். இடம்பெயர் தொழிலாளர்களுக்கும் இந்தத் திட்டம் மிகுந்த பயனளிக்கும்.  இந்தத் திட்டத்தின் மூலம், ஒருவர் வேறு மாநிலங்களில் ரேஷன் கார்டுகளை வைத்திருக்க முடியாது.

 

ஸ்மார்ட் ரேஷன் கார்டுகளில் பட்டியலிடப்பட்டுள்ள குடும்ப உறுப்பினர்களைத் தவிர மற்ற யாரும் ரேஷன் பொருட்களை வாங்க முடியாது. இதற்கை ரேசன் கார்டில் உள்ள குடும்ப உறுப்பினர்களின் கை ரேகைகள் பதிவு செய்யப்படுகிறது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon