--- --:--:-- --

விஜயகாந்த் மற்றும் அவரது மனைவி பிரேமலதா உடல் நிலை எப்படி? மியாட் மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை!!

16

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மற்றும் அவரது மனைவி பிரேமலதா ஆகியோர் உடல் நிலை குறித்து மியாட் மருத்துவமனை நிர்வாகம் சார்பில் நிலை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் விஜயகாந்துக்கு கொரோனா நோய்த்தொற்று அறிகுறி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

தேமுதிக தலைவர் விஜயகாந்த் வழக்கமான பரிசோதனைக்காக சென்னை மியாட் மருத்துவமனையில் கடந்த வாரம் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டதில் லேசான தொற்று அறிகுறி இருப்பது உறுதியானது. இதையடுத்து அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் விஜயகாந்த் மனைவி பிரேமலதாவுக்கும் கொரோனா தொற்று இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டு அவரும் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியானது.

 

இதற்கிடையில் இருவரின் உடல்நிலை குறித்த மருத்துவ நிலை அறிக்கையை மியாட் மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் வெளியிடப்பட்டுள்ளது.

 

அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் செப்டம்பர் 28ஆம் தேதி கோவிட் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு நோய்த்தொற்று உறுதியாகி சென்னை மியாட் மருத்துவமனையில் செப்டம்பர் 29-ம் தேதியன்று அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் உடல்நிலை சீராக உள்ளது.

 

பிரேமலதா விஜயகாந்தின் முதல் நிலை பரிசோதனைக்கு பின் தேமுதிக தலைவர் விஜயகாந்த் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார். அவரின் உடல்நிலை சீராக உள்ளது. நோய்க்கான அறிகுறி இல்லை. தொடர் மருத்துவ சேவைகளால் அவர் நல்ல முன்னேற்றம் அடைந்து இருக்கிறார் மியாட் மருத்துவமனையின் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon