--- --:--:-- --

கோவிஷீல்டு தடுப்பூசி பரிசோதனை சென்னையில் தொடங்குகிறது..!

4.1

க்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் தயாரித்திருக்கும் கோவிஷீல்டு தடுப்பூசி பரிசோதனை சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது. பிரிட்டனின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் மற்றும்அஷ்ட்ரா ஜெனகா மருந்து நிறுவனமும் இணைந்து தயாரித்திருக்கும் கோவிஷீல்டு என்ற கொரொனா தடுப்பூசி பல்வேறு நாடுகளில் அது தொடர்பான சோதனை நடைபெற்று வருகிறது.

 

இந்தியாவில் 17 நகரங்களில் ஆயிரத்து 600 பேருக்கு இந்த தடுப்பு மருந்து செலுத்தப்பட்டு சோதனை செய்யப்பட உள்ளது. இந்த நிலையில் சென்னையில் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் இந்த தடுப்பூசி சோதனை தொடங்கப்பட்டுள்ளது.

 

தன்னார்வலர்கள் 300 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட இருப்பதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon