--- --:--:-- --

மகளுடன் பேச முடியாததால் மனமுடைந்த தந்தை தூக்கிட்டு தற்கொலை..!

3

சென்னையில் மகள்கள் தினத்தில் மகளுடன் தொலைபேசியில் பேச முயன்றும் முடியாமல் போனதால் மனமுடைந்த தந்தை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

முகப்பேரை சேர்ந்த சிவப்பிரகாசம் என்பவருக்கு மது பழக்கம் இருந்ததால் அவரது மனைவி, மகன் மற்றும் மகள் ஆகியோர் கடந்த மூன்று வருடங்களாக ஒரே வீட்டில் இருந்தும் அவருடன் பேசவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு மனைவியும், மகளும் வெளியூர் சென்றதால் மனமுடைந்து காணப்பட்ட சிவப்பிரகாசம் நேற்று மகள்கள் தினம் என்பதால் மகளுடன் தொலைபேசியில் பேச முயன்றுள்ளார்.

 

அது முடியாமல் போகவே ஏற்கனவே மன உளைச்சலில் இருந்த அவர் படுக்கை அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon