--- --:--:-- --

பாடகர் எஸ்.பி.பி. உடல் நிலை மீண்டும் மிகவும் கவலைக்கிடம்..! மருத்துவமனை அறிக்கையில் தகவல்!!

gj

கொரோனா தொற்றால் பாதிக்கப் பட்ட பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலை தேறி வந்த நிலையில் மீண்டும் மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

பிரபல சினிமா பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த ஆகஸ்ட் 5-ந் தேதி முதல் சிகிச்சையில் உள்ளார். சென்னை சூளைமேட்டில் 2ள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவருடைய உடல் நிலை கடந்த மாதம் மிக மோசமானது.

 

உலகத் தரம் வாய்ந்த தீவிர சிகிச்சையின் பலனாக அவருடைய உடல் நிலை தேறி வருவதாக அவருடைய மகன் எஸ்.பி.பி. சரண், தினசரி உடல் நிலை குறித்து தகவல் வெளியிட்டு வந்தார். கடந்த இரு தினங்களுக்கு முன்பு கூட, எஸ்.பி.பி. உடல் நிலை நன்கு தேறி வருவதாகவும், விரைவில் வீடு திரும்ப ஆர்வமாக உள்ளார் என்றும் பதிவிட்டிருந்தார்.

 

இந்நிலையில் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் உடல்நிலை மீண்டும் மிகவும் கவலைகிடமாக உள்ளது என மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கை பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. கடந்த 24 மணி நேரமாக அவருடைய உடல் நிலை மேலும் மோசமடைந்து உள்ளதாகவும், அவருக்கு உயிர் காக்கும் கருவிகள் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது எனவும் மருத்துவமனை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon