--- --:--:-- --

கேரளாவில் அடுத்த ஆண்டில் தான் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும்…!

10.1

கேரளாவில் அடுத்த ஆண்டு ஜனவரியில் தான் பள்ளி கல்லூரிகள் திறக்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் விவசாயிகள், வியாபாரிகள், தொழிலதிபர்கள் என அனைத்து தரப்பினரும் பயன்பெறும் வகையில் அடுத்த 100 நாட்களில் 100 திட்டங்களை அமல் படுத்தப் போவதாக தெரிவித்தார்.

 

கொரொனா தொற்றை கருத்தில் கொண்டு பள்ளி, கல்லூரிகளில் அடுத்த ஆண்டு ஜனவரியில் திறக்க பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் கூறினார். 5 லட்சம் மாணவ, மாணவியருக்கு விலையில்லா மடிக்கணினி வழங்குவது உள்ளிட்டவை 100 நாள் திட்டத்தில் செயல்படுத்தப்படும் எனவும் பினராயி விஜயன் குறிப்பிட்டார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon