நீட் தேர்வை தள்ளிவைக்க முடியாது என்ற உத்தரவை மறுபரிசீலனை செய்யக்கோரி 6 மாநில அமைச்சர்கள் சீராய்வு மனு..!
நீட் தேர்வை தள்ளிவைக்க முடியாது என்ற உச்சநீதிமன்ற உத்தரவை மறுபரிசீலனை செய்யக்கோரி 6 மாநில அமைச்சர்கள் சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளனர். நீட் தேர்வு வருகிற 13ம் தேதியும், ஜெஇஇ மெயின் தேர்வு செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 6ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தேர்வை தள்ளிவைக்க கோரி மாணவர்கள் சிலர் தொடுத்த வழக்கை உச்சநீதிமன்றம் ஏற்கனவே தள்ளுபடி செய்திருந்தது.
நாட்டில் கொரொனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் உச்ச நீதிமன்ற உத்தரவை மறுபரிசீலனை செய்யக்கோரி 6 மாநில அமைச்சர்கள் சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேற்கு வங்கம், ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், மகாராஷ்டிரா, பஞ்சாப், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.






