--- --:--:-- --

காதலை ஏற்க மறுத்ததால் காதலியின் தாயை ஆபாசமாக சித்தரித்து இன்ஸ்டாவில் பதிவிட்ட மாணவன்..!

1

சென்னையில் ஒரு தலை காதல் நிறைவேறாத கோபத்தில் பள்ளித் தோழியின் தாயை ஆபாசமாக சித்தரித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட பன்னிரண்டாம் வகுப்பு மாணவர் காவல் துறையினருடன் சிக்கினார். சென்னை அசோக் நகரைச் சேர்ந்த பெண் தொழிலதிபரின் செல்போனுக்கு சில நாட்களாக தொடர்ந்து ஆபாச அழைப்புகள் வந்துள்ளன.

 

வாட்ஸ் அப்பில் ஆபாச வீடியோக்களும், குறுஞ்செய்திகளும் வந்துள்ளன. இன்ஸ்டகிரம் அதிர்ச்சி காத்து இருந்தது அவருக்கு. அதில் அந்தப் பெண் தொழிலதிபர் இன்ஸ்டாகிராம் படங்களை ஆபாசமாக சித்தரித்து போலியாக ஒரு பக்கத்தைத் தொடங்கி அவருடைய செல்போன் எண்ணும் பதிவிடப்பட்டிருந்தது.

 

இதுகுறித்து குமரன் நகர் காவல்துறையில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் அடையாறு காவல் மாவட்ட சைபர் கிரைம் பிரிவினர் விசாரித்துள்ளனர். ஐபி முகவரியை வைத்து ஆயிரம் விளக்கு பகுதியை சேர்ந்த பிளஸ் 2 மாணவர் ஒருவரை பிடித்தனர்.

 

விசாரணையில் அந்த மாணவர் பெண் தொழிலதிபரின் மகளுடன் பள்ளியில் படித்தவர் என தெரியவந்தது. தோழி தனது காதலை நிராகரித்ததாகவும் தாயின் அறிவுரையால் தான் காதல் கைகூட வில்லை எனவும் கருதி பழிவாங்குவதற்காக இவ்வாறு செய்ததாகவும் அந்த மாணவர் கூறியிருக்கிறார்.

 

தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துவது உள்ளிட்ட பிரிவுகளில் அவர் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மாணவரை அரசு கூர்நோக்கு இல்லத்தில் சேர்த்தனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon